Followers

Followers

Wednesday, 17 August 2016

த்ரீ இன் ஒன்

ஃப்ரெஷ்  லெமன் ஜூஸ்.......
 தேவையான பொருட்கள்....
 நல்ல பழுத்த எலுமிச்சம் பழங்கள்.....25.....
 ஜீனி......கால்  கிலோ...
 உப்பு........ ஒரு   சிட்டிகை..
 இஞ்சி...... ஒரு பெரிய துண்டு...

செய்முறை....
எலுமிச்சம் பழங்களை நன்கு கழுவி சுத்தம் செய்து
 பாதி பாதியாக கட் செய்து கொள்ளவும்......
 வாயகன்ற ஒரு பெரிய ஸ்டீல் பாத்திரத்தில்
  க்ரஷரால்  ஜூஸ் பிழிந்து கொள்ளவும். அதில் ஜீனி உப்பு.....கேரட் துருவியில்
 துருவிய இஞ்சி துருவலையும் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவும்..
 ஜினி கரைந்து இஞ்சியின் எஸென்ஸும் கலக்க ஒருநாள் ஆகலாம்..
 மறுநாள் அந்த சிரப்பை டீ வடிகட்டியில் வடிகட்டி
 கண்ணாடி பாட்டிலில் ஊற்றி  காற்று புகாமல் மூடி வைக்கவும்... பரிமாறும் போது
 ஒரு டம்ளர் சிரப்புக்கு 3-- டம்ளர் தண்ணீரு சேர்த்து கலந்து கொடுக்கவும்.
 ஃப்ரெஷ் லெமனு ஜூஸ் ரெடி.. இந்த சிரப்பை  ஃப்ரிஜ்ில் வைத்து பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை. வெளியே வைத்திருக்கலாம்... மிகவும் ஈஸியான முறையில் தயார் செய்து விடலாம். அடுப்பு வேலையே கிடையாது..
6--- மாதங்கள் வரையிலும் சுவை மாறாமல் இருக்கும்....

பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை தோல்களில் உப்பு  கார ஊறுகாய் தயார் செய்யலாம்.
 எலுமிச்சை தோல்களிலிருந்து கொட்டைகள் நீக்கி பொடி பொடியாக கட் செய்து உப்பு மஞ்ச பொடி சேர்த்து கலந்து பத்து நாட்களுக்கு குலுக்கி வைக்கவும். தோலில் புளிப்பு கம்மியா இருக்கும். அதனால பாதி உப்பு சேர்க்கவும். நன்கு ஊறி புளிப்பு ஊறுகாய் ரெடி ஆயிடும்... காரம் தேவைப்பட்டால்..
 அடுப்பில் கடாய் சூடுபண்ணி  நல்லெண்ணை ஒருகரண்டி சூடுபண்ணி கடுகு பெருங்காயம் தாளித்து இரண்டு ஸ்பூன் காரப்பொடி சேர்த்து கலந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஊறி இருக்கும் புளிப்பு ஊறுகாயில் தேவையானதை சேர்த்து கிளறவும்.. 

15 comments:

 1. ஆஹா ..... மிகவும் பயனுள்ள ருசியான பதிவு. பாராட்டுகள்.

  ReplyDelete
 2. ’த்ரீ இன் ஒன்’ என்ற

  தலைப்’பூ’வே மணமுள்ளதாக உள்ளதூஊஊஊஊ. :)

  ReplyDelete
  Replies
  1. ஹையோ.. எதிர் பார்க்கவேல்ல.. வாங்க ஜி..ரொம்ப சந்தோஷமா இருக்குது.. அடிக்கடி வாங்க.. நன்றி ஜி..

   Delete
 3. இது நல்லா இருக்கே. ர்சியாவும் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க.. ரொம்ப ஹாப்பி....

   Delete
 4. இந்த பதிவுக்கும் கமெண்ட் போட்டிருந்தேன். அதுவும் கூகுள்+--ல இருக்குதே..

  ReplyDelete
 5. அங்க பாத்தேன். சிப்பிக்குள் முத்து.னு பேரு இல்ல. MEH RU.....இருந்திச்சு.. அதான் கன்ஃப்யூஸ் ஆயிடிச்சி..

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco 20 August 2016 at 21:35

   //அங்க பாத்தேன். சிப்பிக்குள் முத்து.னு பேரு இல்ல. MEH RU.....இருந்திச்சு.. அதான் கன்ஃப்யூஸ் ஆயிடிச்சி..//

   கன்ஃப்யூஸ் ஆகாதீங்கோ.

   அவங்க மிகவும் பெயர்போனவங்க .... அதாவது மிகவும் பிரபலமானவங்க.

   அவங்களுக்கு இதுபோல ஒவ்வொரு இடத்திலும் ஏகப்பட்ட பெயர்கள் உண்டு.

   G+ இல் அவர்களின் கமெண்ட்டுக்கு நான் ஒரு பதில் கொடுத்திருந்தேன். அதை அவங்க பார்த்தாங்களோ இல்லையோ .... ஒரே கவலையா இருக்குது. :)

   Delete
 6. கோபூஜி..... இதெல்லாம் ரொம்பவே ஓவர்ஜி........ ஷாமைன்ஜி... நம்ம கோபூஜி..2011---- லேந்து பதிவு போடுறாங்களே. அவங்க எழுதாத விஷயமே கிடையாது.. எழுதுறதுமட்டுமில்லிங்க வாசகர்களுக்கு போட்டிலாம் வச்சு பரிசுகளை அள்ளி அள்ளி கொடுத்திருக்காங்க. ரொம்ப திறமையானவங்க.. ஆல்ரவுண்டர்... நீங்க இப்பதானே வந்திருக்கிங்க.. இனிமேல் கொஞ்சம் கொஞ்சமா அவங்கள பத்தி புரிஞ்சுக்குவீங்க. இவ்வளவு பிரபலமானவங்களா இருந்தா கூட பந்தாவோ கோவமோ கிடையவே கிடையாது.நான்லாம் இப்ப கொஞ்ச நாளாதான் பழக்கம்.. என்னிய போயி பிரபலமானவன்னெல்லாம் வஞ்சகம் புகழ்ச்சி செய்யுறாங்க நம்பிகிடாதிங்க... பழகுற எல்லாரையுமே அன்பால் அரவணச்சுப்பாங்க. எனக்கு அவங்கள ரொம்ப....ரொ....ம்...ப...வே பிடிக்கும்

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள மீனா, வணக்கம்மா.

   என்னைப்பற்றி எனக்கே தெரியாத எவ்ளோ விஷயங்களை இங்கு கூறி என்னை மகிழ்வித்து கூச்சப் ப-டு-த்-தி யுள்ளீர்கள்.

   இருப்பினும் நான் இன்றும் மிகச் சாதாரணமானவன் மட்டுமே என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

   தங்களின் பேரன்புக்கு என் நன்றிகள் ..... மீனா.

   நான் 2014 + 2015 இல் நடத்தியுள்ள. தாங்கள் சொல்லியுள்ள போட்டிகள் பற்றி, இவர்கள் படங்களுடன் முழுவதும் அறிய இந்தக்கீழ்க்கண்ட என் பதிவுகளின் இணைப்புகள் பயன்படக்கூடும்.

   http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

   http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

   Delete
 7. ரொம்ப நன்றி முன்னா. நானும் அவங்களுக்கு புது பேரு ஸெலக்ட் பண்ணிட்டேன்... கிருஷ்ணாஜி..... அவங்க ஏதும் மிஸ்டேக் பண்ணிகிட்டேன் மாட்டாங்கதானே.????

  ReplyDelete
 8. ரொம்ப நன்றி முன்னா. நானும் அவங்களுக்கு புது பேரு ஸெலக்ட் பண்ணிட்டேன்... கிருஷ்ணாஜி..... அவங்க ஏதும் மிஸ்டேக் பண்ணிகிட்டேன் மாட்டாங்கதானே.????

  ReplyDelete
  Replies
  1. ’மிஸ்டேக்’ என்றால் என்ன அர்த்தம் என்றே தெரியாதவன் இந்தக் கிருஷ்ணாஜி. :)

   தங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னுடைய பழைய பதிவுகளுக்கு வருகை தந்து தினமும் ஒன்று வீதம் பின்னூட்டம் கொடுங்கோ, ப்ளீஸ்.

   ஆரம்ப முதல் பதிவுக்கான இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2011/01/blog-post.html

   தங்களின் இ.மெயில் ஐ.டி. கொடுத்தால் அனைத்து இணைப்புகளையும் கொஞ்சம் கொஞ்சமாக நான் மெயில் மூலம் அனுப்பி வைப்பேன்.

   My e-mail ID : valambal@gmail.com

   [ V A L A M B A L @ G . M A I L . C O M ]

   நன்றியுடன்
   கிருஷ்ணாஜி

   Delete
 9. மெயில். ஐ.டி. கொடுத்ததற்கு நன்றிங்க. நேரம் கிடைக்குறப்போ கண்டிப்பா மெயில் பண்ணுறேன்...

  ReplyDelete