Followers

Followers

Saturday 24 September 2016

த்ரீ..இன்..ஒன்....பார்ட்...2..

தக்காளிக்காய்  ஊறுகாய்....

 தேவையான  பொருட்கள்...

 தக்காளி  காய்கள்........அரைக்கிலோ

 சமையல்   எண்ணை.......250--கிராம்

காரப் பொடி........100-- கிராம்...

பெருங்காயத்தூள்......சிறிதளவு..

 உப்பு........தேவையான அளவு..

 செய் முறை....

அடுப்பில் அடிகனமான கடாயை வைத்து எண்ணையை ஊற்றி சூடு படுத்தவும்...

தக்காளி காய்களை கழுவி சுத்தம் செய்து பொடி  பொடியாக கட்செய்து வைக்கவும்..

 எண்ணை சூடானதும்  ஒரு டீஸ்பூன் கடுகு போட்டு பொரிந்ததும் காய்களைச் சேர்க்கவும்... அடுப்பை சிம்மிலேயே வைக்கவும். தக்காளி சீக்கிரமே வதண்கிவிடும்... பாதி வதங்கினதும்.. காரப் பொடி...பெருங்காயப்பொடி உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.. கார வாசனை போனதும் இறக்கி நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.... ப்ரிஜ்ல வச்சா ஒரு வாரம்...பத்து நாட்களுக்கு நன்றாக இருக்கும்....


தக்காளிக்காய்  சட்னி...

 தேவையான பொருட்கள்...

 தக்காளி காய்கள்........கால் கிலோ.
 (நன்கு கழுவி  சிறு துண்டுகளாக கட்செய்யவும்
.)..
 வெள்ளை எள்ளு........ ஒரு டேபிள்.ஸ்பூன்..
 வற்றல் மிளகாய்.....5---.
 உளுத்தம்பருப்பு.......ஒரு டேபிள் ஸ்பூன்..
சமையல் எண்ணை....  ஒரு குழிக்கரண்டி அளவு..
 தேங்காய்  துருவல்... பாதிமூடி..
 உப்பு....தேவையான அளவு..

 செய்முறை....

அடுப்பில் கனமான கடாய் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு மிளகாய் போட்டு சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதேகடாயில் காய்களைப்போட்டு நன்கு சுருண்டு வரும்படி வதக்கவும். மற்றொரு சின்ன கடாயில் கடாயில் எள்ளை எண்ணை விடாமல் சிவக்க வறுக்கவும்
 ஆறிய பிறகு  எல்லாவற்றையும்  மிக்சியில் சடனி பக்குவத்தில் அரைக்கவும்......

தக்காளிக்காய்  கூட்டு....

தேவையான பொருட்கள்....

பயத்தம்பருப்பு.......200--- கிராம்..
தக்காளி காய்......கால் கிலோ..
 மஞ்சத்தூள்..பெருங்காயத்தூள்.உப்பு...தேவையான அளவு

செய்முறை....
 கடாயில் பயத்தம் பருப்பை வாசனை வரும்படி வறுத்து ரெண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.. பருப்பு முக்கால் பதம் வெந்ததும் கட்செய்து வைத்திருக்கும் தக்காளி காய்களை சேர்க்கவும். மேலாக மஞ்சத்தூள்...பெருங்காயதுதூள் சேர்க்கவும். எல்லாமு சேர்ந்து நன்கு வெந்ததும் கீழே இறக் கி வைக்கவும். ஒருஸ்பூன் தேங்கா எண்ணையில் ஒருடீஸ்பூன்  கடுகு உளுந்து நாலு சிவப்பு மிளகாய் தாளிக்கவும்..