Followers

Followers

Saturday 24 September 2016

த்ரீ..இன்..ஒன்....பார்ட்...2..

தக்காளிக்காய்  ஊறுகாய்....

 தேவையான  பொருட்கள்...

 தக்காளி  காய்கள்........அரைக்கிலோ

 சமையல்   எண்ணை.......250--கிராம்

காரப் பொடி........100-- கிராம்...

பெருங்காயத்தூள்......சிறிதளவு..

 உப்பு........தேவையான அளவு..

 செய் முறை....

அடுப்பில் அடிகனமான கடாயை வைத்து எண்ணையை ஊற்றி சூடு படுத்தவும்...

தக்காளி காய்களை கழுவி சுத்தம் செய்து பொடி  பொடியாக கட்செய்து வைக்கவும்..

 எண்ணை சூடானதும்  ஒரு டீஸ்பூன் கடுகு போட்டு பொரிந்ததும் காய்களைச் சேர்க்கவும்... அடுப்பை சிம்மிலேயே வைக்கவும். தக்காளி சீக்கிரமே வதண்கிவிடும்... பாதி வதங்கினதும்.. காரப் பொடி...பெருங்காயப்பொடி உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.. கார வாசனை போனதும் இறக்கி நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.... ப்ரிஜ்ல வச்சா ஒரு வாரம்...பத்து நாட்களுக்கு நன்றாக இருக்கும்....


தக்காளிக்காய்  சட்னி...

 தேவையான பொருட்கள்...

 தக்காளி காய்கள்........கால் கிலோ.
 (நன்கு கழுவி  சிறு துண்டுகளாக கட்செய்யவும்
.)..
 வெள்ளை எள்ளு........ ஒரு டேபிள்.ஸ்பூன்..
 வற்றல் மிளகாய்.....5---.
 உளுத்தம்பருப்பு.......ஒரு டேபிள் ஸ்பூன்..
சமையல் எண்ணை....  ஒரு குழிக்கரண்டி அளவு..
 தேங்காய்  துருவல்... பாதிமூடி..
 உப்பு....தேவையான அளவு..

 செய்முறை....

அடுப்பில் கனமான கடாய் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு மிளகாய் போட்டு சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதேகடாயில் காய்களைப்போட்டு நன்கு சுருண்டு வரும்படி வதக்கவும். மற்றொரு சின்ன கடாயில் கடாயில் எள்ளை எண்ணை விடாமல் சிவக்க வறுக்கவும்
 ஆறிய பிறகு  எல்லாவற்றையும்  மிக்சியில் சடனி பக்குவத்தில் அரைக்கவும்......

தக்காளிக்காய்  கூட்டு....

தேவையான பொருட்கள்....

பயத்தம்பருப்பு.......200--- கிராம்..
தக்காளி காய்......கால் கிலோ..
 மஞ்சத்தூள்..பெருங்காயத்தூள்.உப்பு...தேவையான அளவு

செய்முறை....
 கடாயில் பயத்தம் பருப்பை வாசனை வரும்படி வறுத்து ரெண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.. பருப்பு முக்கால் பதம் வெந்ததும் கட்செய்து வைத்திருக்கும் தக்காளி காய்களை சேர்க்கவும். மேலாக மஞ்சத்தூள்...பெருங்காயதுதூள் சேர்க்கவும். எல்லாமு சேர்ந்து நன்கு வெந்ததும் கீழே இறக் கி வைக்கவும். ஒருஸ்பூன் தேங்கா எண்ணையில் ஒருடீஸ்பூன்  கடுகு உளுந்து நாலு சிவப்பு மிளகாய் தாளிக்கவும்..

11 comments:

  1. ஆஹா, தக்காளி ஊறுகாய், தக்காளிச் சட்னி, தக்காளிக்கூட்டு என இன்றைய த்ரீ..இன்..ஒன்....பார்ட்...2..இல் செய்முறைகளை நன்கு விளக்கிச் சொல்லி என் பசியைக் கிளப்பி விட்டுள்ளீர்கள்.

    இதில் தக்காளி சட்னியும், தக்காளிக்கூட்டும் அடிக்கடி என் வீட்டில் செய்பவை மட்டுமே.

    இதில் பாசிப்பருப்பு கலந்த தக்காளிக்கூட்டு எனக்கு மிகவும் பிடித்தமானதோர் ஐட்டம் ஆகும்.

    பாராட்டுகள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வாங்க கிஷ்ணாஜி... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜி...

    ReplyDelete
  3. க்ஷாமைன்ஜி தக்காளிக்காய் ஊறுடா...கூட்டு...சட்னி எல்லாமே செய்முறை விளக்கமா சொல்லி இருக்கிங்க. படிக்கும்போதே டேஸ்டா இருக்குது... சட்னி...கூட்டு பண்ணியிருக்கேன்..ஊறுகா பண்ணிபாக்கல. இந்த குறிப்பு பாத்து பண்ணி பாக்கணும்.. ஹை...கோபு பெரிப்பா கூட வந்திருக்காளா...

    ReplyDelete
  4. ஹா ஹா ...ஹாப்பி வாங்க.. உங்க கமெண்ட் படிக்கும்போதே ஹேப்பியா இருக்குது..

    ReplyDelete
  5. ஷாமைன்ஜி மூன்று முத்துக்கள்போல சுவையான குறிப்புகள்..

    ReplyDelete
  6. வாங்க ப்ராப்தம்ஜி.. பிடிச்சுதா..

    ReplyDelete
  7. கோவாவில் வசிக்கும் பிரபல பதிவர் திருமதி. ஷாமைன் பாஸ்கோ அவர்களின் இல்லத்திற்கு, மும்பையின் பிரபல பதிவர் ‘ப்ராப்தம்’ சாரூஜி, இந்த வாரத்தில் ஓர் நாள், தன் குடும்பத்துடன் திடீர் வருகை புரிந்து, ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசி, இருவரும் மகிழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

    இது விஷயம் கோவாவிலிருந்து வெளிவரும் தினசரி பத்திரிகைகளில் இன்றைய (13.10.2016) தலைப்புச் செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த திடீர் இரகசிய சந்திப்பு பற்றிய புகைப்படங்களோ, சந்திப்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தை விபரங்களோ தெளிவாக இதுவரை எங்கும் யார் மூலமும் வெளியிடப்படவில்லை.

    திருமதி. ஷாமைன் பாஸ்கோ அவர்கள் வீட்டில் மொத்தம் ஏழு நபர்கள். அதாவது அவள் + அவளது கணவர் + இரு பிள்ளைக்குழந்தைகள் + ஒரு பெண் குழந்தை + மிகவும் வயதான மாமனார் + மாமியார் ஆக மொத்தம் ஏழு நபர்கள். இதைத்தவிர அவர்கள் மிகவும் பிரியமாக வளர்க்கும் இரண்டு நாய்க்குட்டிகள் வேறு, தனியாக. :)

    அங்கு அவர்களைச் சந்திக்கச் சென்றுள்ள சாரூஜி குடும்பத்தினர் தற்சமயம் 3 + + என்பது நாம் அனைவரும் அறிந்ததே. :))

    இவர்களின் இந்த திடீர் அபூர்வ சந்திப்பினால் திருமதி. ஷாமைன் பாஸ்கோ இல்லமே கோலாகலமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

    கோவாவில் உள்ள அனைத்துக் கடற்கரைகளிலும், ஆனந்தமாக சன் - பாத் எடுத்துக்கொண்டிருக்கும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும், வெள்ளைக்காரிகளும், இந்த அபூர்வக் காட்சியினைக்காண, தங்களின் நீச்சல் உடையுடனோ இல்லை அதுவும் இல்லாமலோ ஓடோடி வந்திருப்பார்கள் என என்னால் கற்பனை செய்து பார்த்து மகிழ முடிகிறது. :)

    பிரபல பதிவர் திருமதி. ஷைமன் பாஸ்கோ அவர்கள், தான் நேரில் சந்திக்கும் முதல் பதிவர் என்ற பெருமையை பிரபல ’ப்ராப்தம்’ பதிவர் திருமதி. சாரூஜி பெறுகிறார்.

    பிரபல ’ப்ராப்தம்’ பதிவர் திருமதி. சாரூஜி அவர்கள் நேரில் சந்திக்கும் மூன்றாவது பிரபல பதிவர் திருமதி. ஷைமன் பாஸ்கோ ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வாழ்க ! வாழ்க !!

    இரு பிரபல பதிவர்களுக்கும் நம் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. //இது விஷயம் கோவாவிலிருந்து வெளிவரும் தினசரி பத்திரிகைகளில் இன்றைய (13.10.2016) தலைப்புச் செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. //

    கிஷ்ணாஜி.....செம குறும்பு..கோவா நியூஸ் பேப்பர் திருச்சில பாத்திங்களா..சூப்பரூஊஊஊஊ

    ReplyDelete
    Replies
    1. //கிஷ்ணாஜி.....செம குறும்பு..கோவா நியூஸ் பேப்பர் திருச்சில பாத்திங்களா..சூப்பரூஊஊஊஊ//

      :))))) மிக்க நன்றி. :)))))

      Delete
  9. செய்முறை அருமை... நன்றி...

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி ஸார்

    ReplyDelete