Followers

Followers

Tuesday 25 October 2016

பாஸந்தி..

பாஸந்தி...

தேவையான பொருட்கள்....

பால்............2--லிட்டர்

ஜீனி............200--கிராம்

சிரஞ்சி  தானா......50--கிராம்

( இதுக்கு..தமிழ்  பேரு தெரியல...
     ஹார்ஸ்  க்ராம் னு சொல்லுவாங்கல்ல
    கொள்ளு..... அதுபோல ப்ரௌன் கலருல
     முழு பருப்பா  இருக்கும்)

       எவரெஸ்ட்...மில்க்  மஸாலா  தூள்.......2--ஸ்பூன்..

         இதுலதான்..பாதாம்  பிஸ்தா...ஏலக்கா..
          குங்குமப்பூவு  எல்லாம் கலந்து பொடி பண்ணி
         வச்சிருப்பாங்க...நல்ல  ஃபளேவர்  கொடுக்கும்
        இது கிடைக்காதவங்க 5--- ஏலக்காய  பொடி பண்ணி
        சேர்த்துகிடலாம்...

         செய்முறை......

           வாயகன்ற கனமான கடாயில்
            பாலை ஊற்றி அடுப்பை ஸிம்மில்
            வைத்து  காய்ச்சவும்...மேலாக  ஆடை
            படிய  படிய சிறு கரண்டியால்.பாத்திரத்
             பக்கவாட்டில்  ஒதுக்கவும்.. பால் நன்கு
             கொதிக்கும்போது   ஆடை  வராது... ஸோ..
              அடுப்பை   ஸிம்மிலேயே வைக்கவும்..
                 இப்படி  எல்லா  பாலும்  வற்றி  ஆடை
               சேர  குறைந்தது  இரண்டு மணி நேரமாவது
             ஆகலாம்.இரண்டு லிட்டர் பால்  குறுகி
             அரை லிட்டராக வற்றி விடும்.. அடுப்பை
           அணைத்து விட்டு  ஷுகர்...மில்க் மஸாலா
            தூள்...சிரஞ்சிதானா   சேர்க்கவும்
           
              நல்ல பிங்க்  கலரில் சுவையான சுலபமான
              மில்க்  ஸ்வீட்  தயார்...