Followers

Followers

Tuesday, 25 October 2016

பாஸந்தி..

பாஸந்தி...

தேவையான பொருட்கள்....

பால்............2--லிட்டர்

ஜீனி............200--கிராம்

சிரஞ்சி  தானா......50--கிராம்

( இதுக்கு..தமிழ்  பேரு தெரியல...
     ஹார்ஸ்  க்ராம் னு சொல்லுவாங்கல்ல
    கொள்ளு..... அதுபோல ப்ரௌன் கலருல
     முழு பருப்பா  இருக்கும்)

       எவரெஸ்ட்...மில்க்  மஸாலா  தூள்.......2--ஸ்பூன்..

         இதுலதான்..பாதாம்  பிஸ்தா...ஏலக்கா..
          குங்குமப்பூவு  எல்லாம் கலந்து பொடி பண்ணி
         வச்சிருப்பாங்க...நல்ல  ஃபளேவர்  கொடுக்கும்
        இது கிடைக்காதவங்க 5--- ஏலக்காய  பொடி பண்ணி
        சேர்த்துகிடலாம்...

         செய்முறை......

           வாயகன்ற கனமான கடாயில்
            பாலை ஊற்றி அடுப்பை ஸிம்மில்
            வைத்து  காய்ச்சவும்...மேலாக  ஆடை
            படிய  படிய சிறு கரண்டியால்.பாத்திரத்
             பக்கவாட்டில்  ஒதுக்கவும்.. பால் நன்கு
             கொதிக்கும்போது   ஆடை  வராது... ஸோ..
              அடுப்பை   ஸிம்மிலேயே வைக்கவும்..
                 இப்படி  எல்லா  பாலும்  வற்றி  ஆடை
               சேர  குறைந்தது  இரண்டு மணி நேரமாவது
             ஆகலாம்.இரண்டு லிட்டர் பால்  குறுகி
             அரை லிட்டராக வற்றி விடும்.. அடுப்பை
           அணைத்து விட்டு  ஷுகர்...மில்க் மஸாலா
            தூள்...சிரஞ்சிதானா   சேர்க்கவும்
           
              நல்ல பிங்க்  கலரில் சுவையான சுலபமான
              மில்க்  ஸ்வீட்  தயார்...

22 comments:

 1. ஆஹா .... பாஸந்தி செய்முறை அருமையோ அருமை. ருசியோ ருசியாக ... இனிப்போ இனிப்பாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 2. சிரஞ்சி தானா......50--கிராம் //இதுக்கு..தமிழ் பேரு தெரியல...//

  இதனைக் காரப்பருப்பு என இங்கு சொல்லுகிறார்கள்.

  முந்திரிப் பருப்புகளையும் ஒடித்துப்போட்டு இதனைச் செய்யலாம்.

  ReplyDelete
  Replies
  1. நானும் பதிவு போட்ட பிறகுதான் டிக்ஷ்னரில தேடினேன்...சார பருப்புனு போட்டிருக்குது.
   தகவலுக்கு நன்றி கிஷ்ணாஜி..

   Delete
  2. shamaine bosco 26 October 2016 at 00:24

   //நானும் பதிவு போட்ட பிறகுதான் டிக்ஷ்னரில தேடினேன்... சார பருப்புனு போட்டிருக்குது.
   தகவலுக்கு நன்றி கிஷ்ணாஜி..//

   நானும் அடிக்கடி பாஸந்தி குடித்துள்ளேன். அதில் போடும் பருப்புப் பெயர் மட்டும், தமிழில் என்னவென்று எனக்கும் தெரியவில்லை. என் மனைவி + மருமகளிடம் கேட்டேன். காரப் பருப்பு எனச் சொன்னார்கள்.

   எனக்கு துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, மொச்சைப்பருப்பு போன்ற நிறைய பருப்பு வகைகளைப் பற்றி தெரியும்.

   இந்த சார அல்லது காரப் பருப்பு பற்றி மட்டும் இதுவரைத் தெரியவில்லை. :)

   Delete
  3. ஆல் ரவுண்டரான உங்களுக்கே தெரியலைனா நான்லாம் வெறும்
   ஜுஜூபி....

   Delete
  4. shamaine bosco 26 October 2016 at 04:49

   //ஆல் ரவுண்டரான உங்களுக்கே தெரியலைனா நான்லாம் வெறும் ஜுஜூபி....//

   அடாடா, வரவர ரொம்பத்தான் தமிழ் எழுத்துக்களில் அசத்துறீங்கோ. பாராட்டுகள்.

   நான் ஒரு சாப்பாட்டு ராமன் .... அதாவது எனக்குப் பிடித்த பதார்த்தங்களை (சாமான்களை) கேட்டு வாங்கி ரஸித்து, ருசித்துச் சாப்பிடுவதில் மட்டுமே ஆல் ரவுண்டர்.

   மற்றபடி, மற்ற எல்லாவற்றிலும் நானும் வெறும் ஜூஜூபி மட்டுமே.

   Delete
 3. //நல்ல பிங்க் கலரில் சுவையான சுலபமான மில்க் ஸ்வீட் தயார்...//

  தயார் என்று சொன்னால் மட்டும் போதாது. எல்லோரையும் கோவாவுக்கு அழைத்து ஆளுக்கு ஒரு குடம் அளவாவது பாஸந்தி குடிக்கக் கொடுத்து மகிழ்விக்கணுமாக்கும். :)))))

  ReplyDelete
 4. ஹா ஹா...ஒரு குடம் அளவாவதா.. தாங்காது ஸாமி தாங்காது தெகட்டி போகும்லா

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco 26 October 2016 at 00:22

   //ஹா ஹா...ஒரு குடம் அளவாவதா.. தாங்காது ஸாமி தாங்காது தெகட்டி போகும்லா//

   நீங்க குடத்தில் கொடுத்தால் குடிக்கப்போவதோ நான் .... உங்களுக்கு ஏன் அந்தக் கவலை?

   மேலும் திகட்டத்திகட்ட, மேலும் நான் ஏதாவது காரங்கள் கேட்டுப் ப-டு-த்-தி எடுத்துப்புடுவேன் இல்லையா :))))))

   Delete
  2. //நீங்க குடத்தில் கொடுத்தால் குடிக்கப்போவதோ நான் .... உங்களுக்கு ஏன் அந்தக் கவலை? //

   கவலையே அதனாலதானே....அல்ரெடி டயபடீஸ் காரங்க... ஸ்வீட்டு சாப்பிட கூடாதுல்ல.....

   Delete
  3. shamaine bosco 26 October 2016 at 04:51

   **நீங்க குடத்தில் கொடுத்தால் குடிக்கப்போவதோ நான் .... உங்களுக்கு ஏன் அந்தக் கவலை?**

   //கவலையே அதனாலதானே....அல்ரெடி டயபடீஸ் காரங்க... ஸ்வீட்டு சாப்பிட கூடாதுல்ல.....//

   ஓஹோ .... இதையும் எங்கட ஆளு யாரோ உங்களிடம் பத்த வெச்சுட்டாங்களா ????? அவர்கள் வாழ்க !

   ஸ்வீட் சுத்தமாகச் சாப்பிடாததால் வந்துள்ள டயபடீஸ் போய்விடப் போவது இல்லை.

   ஸ்வீட் சாப்பிடுவதால் அது அதிகரித்து என்னை ஒரேயடியாகக் கொண்டுபோய் விடப்போவதும் இல்லை.

   அதனால் நான் ஓரளவு எதற்கும் என்னைப்பற்றி அதிகமாகக் கவலையே படுவதே இல்லை.

   நான் இனிமேல் இந்த உலகத்தில் யாருக்காக நீண்ட நாள் வாழ வேண்டும்?

   என்னைப்பற்றி கவலைப்பட யார் இருக்கிறார்கள்?

   இருந்த ஒருத்தியையும் இப்போ காணவே காணும். :(((((

   அதனால் நீங்கள் குடம்குடமாக எனக்கு பாஸந்தி தந்துதான் ஆக வேண்டும். சொல்லிட்டேன்.

   Delete
 5. அடுப்பை ’சிம்ரன்’னிலேயே வைக்கவும் என நான் ஒரு பதிவினில் எழுதியிருந்தேன்.

  அதாவது அடுப்பை சிம் மிலேயே ரன் செய்யவும் என்பதற்காக.

  அடுப்பில் எதற்காக நடிகை ‘சிம்ரன்’னை வைக்க வேண்டும் என பலரும் தங்கள் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்கள். :)

  http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

  இதுவரை 295 பின்னூட்டங்கள் கிடைத்துள்ள வெற்றிகரமான பதிவு. இருப்பினும் ப்ளாக்கர் சிஸ்டத்தில் உள்ள ஒருசில கோளாறுகளால் உங்களால் அதில் உள்ள முதல் 200 பின்னூட்டங்களை மட்டுமே காணவும் படிக்கவும் இயலும். 201 to 295 என்னால் மட்டுமே வேறு ஒரு வழியில் போய் பார்க்க முடியும்.

  ReplyDelete
  Replies
  1. மேற்படி 295 பின்னூட்டங்கள் கிடைத்துள்ள ‘அடடா என்ன அழகு ... அடையைத் தின்னு பழகு’ என்ற என் பதிவு, பேச்சுலர்ஸ்க்கான சமையல் குறிப்புகள் போட்டியொன்றில் இரண்டாம் பரிசுக்குத் தேர்வானது என்பதும் குறிப்பிடத் தக்கது.

   அதற்கான விபரங்கள் ‘புத்தாண்டில் சில மகிழ்ச்சிகள்’ என்ற தலைப்பிலான என் பதிவினில் உள்ளன. அதற்கான இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2013/01/blog-post.html ..... With 152 Comments as on date 26.10.2016

   Delete
 6. ஹையா...நானும் பாஸந்தி சாப்பிட ( குடிக்க) வந்துட்டேன். எனக்கு ஒருகுடம்லாம் வேணாம் எங்க பக்கத்துல ஐஸ்லோட்டானு சொல்லுவோம் சுமாரா கால் லிட்டரு பிடிக்கும். அதுல ரெண்டு க்ளாஸ் கொடுத்தா போதும்..)))

  ReplyDelete
  Replies
  1. அதென்ன ஐஸ் லோட்டா...கிஷ்ணாஜி..உங்களுக்கு தெரியுமா....
   எல்லாரும் வாங்க சந்தோஷமா பாஸந்தி சாப்பிடுங்க.

   Delete
  2. shamaine bosco 26 October 2016 at 04:53

   //அதென்ன ஐஸ் லோட்டா...கிஷ்ணாஜி..உங்களுக்கு தெரியுமா....//

   தெரியும். எங்க அம்மா / அப்பா வெல்லாம் அப்படித்தான் சொல்லுவார்கள். அதாவது டம்ளர் என்பதை லோட்டா என்று சொல்லுவார்கள். இவள் இங்கு கால் லிட்டர் பிடிக்கும் ஐஸ்லோட்டா (ஐஸ் டம்ளர்) எனச் சொல்லியதைக் கேட்டதும், என் அம்மா ஞாபகமும் வந்து சிரிப்பும் வந்தது.

   எங்கள் வீடுகளில் மிகவும் ஸ்ட்ராங் ஆன, ஃபில்டர் காஃபி இது போன்ற மிகப்பெரிய .. கால் லிட்டர் பிடிக்கும் ஐஸ்லோட்டாக்களில்தான் (பெரிய டம்ளர்களில்தான்) குடிப்போம். அதுவும் தினமும் 3-4 நான்கு முறைகள் குடிப்போம். அதனுடன் ஒரு பெரிய டவராவும் இருக்கும். ஆத்தி ஆத்திக் குடிப்போம். நுரை பொங்கும் A-1 Quality காஃபியாகக் குடிப்போம்.

   இந்த ஹாப்பி பொண்ணும் அதுபோலவே சூப்பராக ஃபில்டர் காஃபி போடக்கூடியவள். சமையல் வேலைகள் அனைத்திலும் கில்லாடி. ஸ்வீட்ஸ் காரம் என எல்லாமே செய்வாள். சமத்தோ சமத்து. அழகோ அழகு. எப்போதுமே சிரித்த முகம் கொண்ட சிங்காரி. அவளைக் கட்டிக் கொள்ளப்போகிறவன் மஹா மஹா மஹா மஹா மஹா அதிர்ஷ்டசாலியாக இருக்கணும். இதற்கு மேல் அவளைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்தும் நான் சொல்லவே மாட்டேனாக்கும்.

   ஐஸ் லோட்டா என அவள் இங்கு சொன்னது, அவளை மேலும் என் சொந்தக்காரியாகவே ஆக்கி விட்டது. :)))))

   மிக்க மகிழ்ச்சி.....டா ஹாப்பி !

   எப்போதும் மிக மிக ஹாப்பியா இரு....டா கண்ணு.

   எல்லாரும் வாங்க சந்தோஷமா பாஸந்தி சாப்பிடுங்க.

   Delete
 7. பாஸந்தியா....குடிக்கணுமா சாப்பிடணுமா.....

  ReplyDelete
  Replies
  1. ஹா...ஹா.... கேட்டாளே ஒரு கேள்வி.... உங்களுக்கு எப்படி வசதி..????

   Delete
 8. நேத்துதான் அவியல் சாப்பிட போய் வந்தேன்..இன்று இனிப்பான பாஸந்தியா.. நல்லா இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. அட ஆமாங்க நானும் போயி அவியலு சாப்பிட்டு வந்தேனே. நம்ம நண்பர்களையும் அங்க பாக்க முடிந்தது..

   Delete
 9. ஹாய் ஷாமைன்...பாஸந்தி சூப்பர் டேஸ்ட்டுஉஉஉ. இவ்வளவு பேரு வந்திருக்காங்களே நெறயா பண்ணியிருக்கிங்களா...

  ReplyDelete
  Replies
  1. அட நீங்க வேற சாரூஜி...... பெரிய அண்டா நெறயா பண்ணி வச்சுகிட்டு நீயேவா....நீயேவா...னு கூவி கூவி அழைச்சுகிட்டு இருக்கேன் எல்லாரும் வந்தது எம்பூட்டு சந்தோசமா இருக்குது.. பியூஷ் எப்படி இருக்கான் சாரூ...

   Delete