Followers

Followers

Tuesday 23 August 2016

ஸ்ரீகண்ட்

ஸ்ரீகண்ட்... பெயர்  தமிழ் காரங்களுக்கு புதுமையா தெரியும்.

தேவையான பொருட்கள்..

 புளிப்பில்லாத கெட்டி தயிர்........ அரை லிட்டர்..

 ஷுகர் ( ஜீனி.)... 100-கிராம்..

 ஏலக்காய் பவுடர்...... ஒரு சிட்டிகை...

 செய்முறை.....


கெட்டியான தயிரை சுத்தமான ஒரு வெள்ளைத்
 துணியில் கட்டி தொங்க விடவும்..

 தண்ணீர் வடிந்து தயிர் கெட்டி ஆகணும்..
 அந்த தயிரை சுத்தமான ஒரு பாத்திரத்தில் போட்டு
 100-- கிராம் ஜீனியை மிக்ஸியில்
 பொடித்து தயிரில் சேர்க்கவும். ஏலப்பொடி
 சேர்க்கவும். கீரை கடையும் மரத்தால் ஆன மத்தால
 பத்து நிமிடங்களுக்கு நன்கு அழுத்தி கலைக்கவும்..
 இந்த கலவை மென்மையான பேஸ்டாக ஆகும்
  ஃப்ரிஜ்ஜில் வைத்தால் கொஞ்சம்
 கெட்டியான பேஸ்ட்தானே ஆகும்..
 சப்பாத்தி...பூரிக்கு பெஸ்ட் காம்பினேஷன்
 இந்த ஸ்ரீகண்ட். அடுப்பு வேலையும் கிடையாது..
 சுலபமான சுவையான இனிப்பு ரெடி. எங்க வீட்டு குழந்தைங்க
 கிண்ணத்தில் போட்டு ஸ்பூனால்
 அப்படியே சாப்பிடுவாங்க...

Wednesday 17 August 2016

த்ரீ இன் ஒன்

ஃப்ரெஷ்  லெமன் ஜூஸ்.......
 தேவையான பொருட்கள்....
 நல்ல பழுத்த எலுமிச்சம் பழங்கள்.....25.....
 ஜீனி......கால்  கிலோ...
 உப்பு........ ஒரு   சிட்டிகை..
 இஞ்சி...... ஒரு பெரிய துண்டு...

செய்முறை....
எலுமிச்சம் பழங்களை நன்கு கழுவி சுத்தம் செய்து
 பாதி பாதியாக கட் செய்து கொள்ளவும்......
 வாயகன்ற ஒரு பெரிய ஸ்டீல் பாத்திரத்தில்
  க்ரஷரால்  ஜூஸ் பிழிந்து கொள்ளவும். அதில் ஜீனி உப்பு.....கேரட் துருவியில்
 துருவிய இஞ்சி துருவலையும் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவும்..
 ஜினி கரைந்து இஞ்சியின் எஸென்ஸும் கலக்க ஒருநாள் ஆகலாம்..
 மறுநாள் அந்த சிரப்பை டீ வடிகட்டியில் வடிகட்டி
 கண்ணாடி பாட்டிலில் ஊற்றி  காற்று புகாமல் மூடி வைக்கவும்... பரிமாறும் போது
 ஒரு டம்ளர் சிரப்புக்கு 3-- டம்ளர் தண்ணீரு சேர்த்து கலந்து கொடுக்கவும்.
 ஃப்ரெஷ் லெமனு ஜூஸ் ரெடி.. இந்த சிரப்பை  ஃப்ரிஜ்ில் வைத்து பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை. வெளியே வைத்திருக்கலாம்... மிகவும் ஈஸியான முறையில் தயார் செய்து விடலாம். அடுப்பு வேலையே கிடையாது..
6--- மாதங்கள் வரையிலும் சுவை மாறாமல் இருக்கும்....

பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை தோல்களில் உப்பு  கார ஊறுகாய் தயார் செய்யலாம்.
 எலுமிச்சை தோல்களிலிருந்து கொட்டைகள் நீக்கி பொடி பொடியாக கட் செய்து உப்பு மஞ்ச பொடி சேர்த்து கலந்து பத்து நாட்களுக்கு குலுக்கி வைக்கவும். தோலில் புளிப்பு கம்மியா இருக்கும். அதனால பாதி உப்பு சேர்க்கவும். நன்கு ஊறி புளிப்பு ஊறுகாய் ரெடி ஆயிடும்... காரம் தேவைப்பட்டால்..
 அடுப்பில் கடாய் சூடுபண்ணி  நல்லெண்ணை ஒருகரண்டி சூடுபண்ணி கடுகு பெருங்காயம் தாளித்து இரண்டு ஸ்பூன் காரப்பொடி சேர்த்து கலந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஊறி இருக்கும் புளிப்பு ஊறுகாயில் தேவையானதை சேர்த்து கிளறவும்.. 

Sunday 14 August 2016

peace: அமைதி

peace: அமைதி:  இன்று புதுசாக வலைப்பதிவு தொடங்கி இருக்கிறேன். ஆன்புடன் அனைவரும் வருக வருக என் அழைக்கிறேன்...

Saturday 6 August 2016

அமைதி

 இன்று புதுசாக வலைப்பதிவு தொடங்கி இருக்கிறேன். ஆன்புடன் அனைவரும் வருக வருக என் அழைக்கிறேன்...