Followers

Followers

Tuesday, 23 August 2016

ஸ்ரீகண்ட்

ஸ்ரீகண்ட்... பெயர்  தமிழ் காரங்களுக்கு புதுமையா தெரியும்.

தேவையான பொருட்கள்..

 புளிப்பில்லாத கெட்டி தயிர்........ அரை லிட்டர்..

 ஷுகர் ( ஜீனி.)... 100-கிராம்..

 ஏலக்காய் பவுடர்...... ஒரு சிட்டிகை...

 செய்முறை.....


கெட்டியான தயிரை சுத்தமான ஒரு வெள்ளைத்
 துணியில் கட்டி தொங்க விடவும்..

 தண்ணீர் வடிந்து தயிர் கெட்டி ஆகணும்..
 அந்த தயிரை சுத்தமான ஒரு பாத்திரத்தில் போட்டு
 100-- கிராம் ஜீனியை மிக்ஸியில்
 பொடித்து தயிரில் சேர்க்கவும். ஏலப்பொடி
 சேர்க்கவும். கீரை கடையும் மரத்தால் ஆன மத்தால
 பத்து நிமிடங்களுக்கு நன்கு அழுத்தி கலைக்கவும்..
 இந்த கலவை மென்மையான பேஸ்டாக ஆகும்
  ஃப்ரிஜ்ஜில் வைத்தால் கொஞ்சம்
 கெட்டியான பேஸ்ட்தானே ஆகும்..
 சப்பாத்தி...பூரிக்கு பெஸ்ட் காம்பினேஷன்
 இந்த ஸ்ரீகண்ட். அடுப்பு வேலையும் கிடையாது..
 சுலபமான சுவையான இனிப்பு ரெடி. எங்க வீட்டு குழந்தைங்க
 கிண்ணத்தில் போட்டு ஸ்பூனால்
 அப்படியே சாப்பிடுவாங்க...

12 comments:

 1. ஸ்ரீகண்ட் நானும் அடிக்கடி பண்ணிடுவேன் ஷாமைன்ஜி. வீட்டுகாரருக்கும் மகனுக்கும் ரொம்ப பிடிக்கும். சுவையான ஸ்வீட்டான பதிவுக்கு நன்றி..

  ReplyDelete
 2. பேரே புதுசா தெரியுது.. அக்கா கிட்ட சொல்லி பண்ண சொல்லணும்.

  ReplyDelete
 3. வாங்க ப்ராப்தம்ஜி. முன்னா..... பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும்..

  ReplyDelete
 4. ஐயே.... என்னது இது... தயிர்ல ஜீனி போட்டு யாராவது சாப்பிடுவாளோ.....

  ReplyDelete
 5. ஹா ஹா... வாங்க ஹாப்பி..... இது ரொம்ப நல்லா இருக்கும்..

  ReplyDelete
 6. ஸ்ரீகண்டன் என்ற பெயரில் எனக்கு ஓர் சொந்த அண்ணா இருந்தார். அவர் பிறந்த ஊர்: செட்டிநாட்டில் காரைக்குடிக்கு அருகே உள்ள வேலங்குடி என்ற ஒரு கிராமம். அங்குள்ள சிவனுக்கு ஸ்ரீ. ஸ்ரீகண்டேஸ்வரர் என்று பெயர். அதனால் என் அந்த அண்ணாவுக்கு ஸ்ரீகண்டன் எனப் பெயரிடப்பட்டது.

  ‘ஸ்ரீ’ என்றால் ’விஷம்’ என்றும் ஓர் அர்த்தமும் உண்டு. ’கண்டம்” என்றால் கழுத்து என்று அர்த்தமாகும்.

  பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும் போது அமிர்தம் கிடைக்கும் முன்பு விஷம் கிடைத்ததாம். அதை சிவ பெருமான் விழுங்கிவிட்டாராம். அது அவர் தொண்டையைத் தாண்டி உள்ளே போகாமல் பார்வதி தேவி தடுத்து நிறுத்தி விட்டாளாம்.

  அதனால் அந்த கொடிய விஷம் சிவனின் கழுத்திலேயே தேங்கி, கழுத்தே நீல நிறமாக மாறிவிட்டதாம். அதனால் சிவனுக்கு ஸ்ரீகண்டன் அல்லது நீலகண்டன் என்ற பெயர்களும் உண்டு.

  >>>>>

  ReplyDelete
 7. ஸ்ரீகண்ட் பற்றி இப்போதுதான் உங்களின் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். இங்கு தமிழ்நாட்டில் இதைத்தான் ’லெஸ்ஸி’ என்று சொல்லுகிறார்கள் என நினைக்கிறேன்.

  என் செல்லக்குழந்தை ஹாப்பி சொல்லியிருப்பதுபோல தயிரில் போய் ஜீனியைப் போட்டால் எப்படி? குழந்தைகளுக்கு வேண்டுமானால் ஒருவேளை பிடிக்கலாமோ என்னவோ. எங்களுக்கெல்லாம் எல்லாமே காரசாரமாக இருக்க வேண்டும்.

  என் காரசார பதிவுகளான இவை இரண்டையும் படித்துப்பாருங்கோ. படிக்கும்போதே காரசார நெடி தாங்காமல் தங்கள் கண்களில் ஜலம் வந்துவிடும்.

  1) வெண்ணிலவைத்தொட்டு முத்தமிட ஆசை ...... மிளகாய்ப்பொடி கொஞ்சம் தொட்டுக்கொள்ள ஆசை ......

  http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html

  2) அடடா ... என்ன அழகு ! அடையைத் தின்னு பழகு !!

  http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

  ReplyDelete
  Replies
  1. உங்க பதிவுகளை நிதானமாக போயி பாக்குறேன்ஜி.

   Delete
 8. சப்பாத்தி என்னவோ எனக்கு எப்போதுமே பிடிப்பது இல்லை.

  சுடச்சுட உப்பலான பூரி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு கைப் பார்த்துவிடுவேன்.

  அதுவும் அந்த பூரிக்குத் தொட்டுக்கொள்ள மஞ்சள் கலரில் மஸால் வேண்டும். அதாவது வெந்த உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கடலைப்பருப்பு + உப்பு, கடுகு மிளகாய் தாளித்த, மஞ்சள் பொடியும் கலந்த மஞ்சள் நிற காரசாரமான மஸால் மட்டுமே.

  சென்னா / குருமா போன்றவை ஏனோ எனக்குப் பிடிப்பது இல்லை.

  ஸ்வீட் தயிரான ’ஸ்ரீகண்ட்’டைப்போய் பூரிக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும் எனச் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவோ, கற்பனை செய்து பார்க்கவோகூட முடியவில்லை.

  இருப்பினும் ஒவ்வொருவர் டேஸ்ட் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும். புதுமையானதோர் பகிர்வுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 9. வாங்க கிஷ்ணாஜி.. லஸ்ஸி வேர ஸ்ரீகண்ட் வேர... லஸ்ஸா தயிர சிலுப்பி ஜீனி போட்டு லூஸா குடிக்கும் பக்குவத்துல இருக்கும். ஸ்ரீகண்ட் தெரட்டு பால் பக்குவத்துல கெட்டியா இருக்கும்.. பிடிக்காதவங்கள கம்பல் பண்ண முடியாதுல்ல... வடநாட்டுல இது ரொம்ப ஃபேமஸ்.. கருத்துக்கு நன்றி..

  ReplyDelete
  Replies
  1. புரிகிறது. லெஸ்ஸி என்பது இனிப்பான மோர் மட்டுமே. ஸ்ரீகண்ட் என்பது இனிப்பான கெட்டித்தயிரில் செய்யப்படும் ஓர் பதார்த்தம்.

   கெட்டித்தயிர் + கெட்டி மோர் தினமும் நாங்களும் விரும்பி சாப்பிடுவோம். ஆனால் அவற்றில் ஜீனி கலக்க மாட்டோம்.

   அதுபோல பாலில் இனிப்பு கலந்து செய்யப்படும் திரட்டுப்பால் என்பதும் எங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்பெஷல் ஸ்வீட் ஆகும்.

   தங்களின் பதிலுக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி.

   Delete
  2. திரட்டுப்பாலை கையில் ஒட்டாதபடிக்கு சுருள் சுருளாக, மிகப் பக்குவமாகச் செய்தால் மிகவும் ஜோராக இருக்கும். எனக்கு அது மிகவும் பிடிக்கும்.

   மிகச்சுவையான இது பெங்களூரில் ’KUNDA’ என்ற பெயரில் டின்களில் அடைத்து விற்கப்படுகிறது.

   அதை இதோ இந்த என் பதிவினில் படத்துடன் காட்டியுள்ளேன்:

   http://gopu1949.blogspot.in/2013/03/2.html

   லஸ்ஸி வேறு ... ஸ்ரீகண்ட் வேறு என்பதையும் புரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

   Delete